சிஸ்டம் சரியில்லை: ரஜினி கருத்துக்கு ‘வலிமை’ வசனம் மூலம் பதிலளித்தாரா அஜித்?

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:27 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிஸ்டம் சரி இல்லை என அரசியலுக்கு வருவதாக கூறிய போது பேசியிருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று வெளியான வலிமை திரைப்படத்தில் சிஸ்டம் சரி இல்லை என்பது குறித்த வசனம் எழுந்துள்ளது
 
அஜித் கேரக்டர் அவரது அம்மா கேரக்டர் உடன் பேசிய வசனத்தில் சிஸ்டம் சரி இல்லை என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா. நாம் சரியாக இருக்க வேண்டும்
 
சிஸ்டம் என்பதே நாம் தான். நாம் எல்லோரும் சரியாக இருந்தால் சிஸ்டம் சரியாகிவிடும் . சிஸ்டம் சரியில்லை என்று அரசை குறை கூறிக்கொண்டு நமக்கு என்று ஒரு பிரச்சனை வரும்போது சுயநலமாக நடந்து கொண்டால் சரியாக இருக்காது என்று கூறியுள்ளார் 
 
இந்த வசனம் ரஜினியை குறிப்பிடுவதற்காக வைக்கப்பட்ட வசனம் என்று கூறப்படும் நிலையில் சமூக வலைதளங்களில் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் மோதிக் கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்