கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்து வெளியேறினார். அதன் பின்னர் இந்த கதையை அவர் ரஜினிகாந்துக்கு கூறியதாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் “நான் துருவ நட்சத்திரம் கதையை ரஜினி சாருக்கு சொன்னேன். அதைக் கேட்டு அவர் நடிப்பதாக சொன்னார். ஆனால் அன்று மாலையே அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். யாரோ அவரிடம் என்னைப் பற்றி தவறாக சொல்லி இருக்கிறார்கள். அது யார் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அதை சொல்லமாட்டேன்” எனக் கூறியுள்ளார்.