இதற்குக் காரணம் மேக்கிங்கில் படக்குழு செலுத்திய கவனத்தை கதையிலும் திரைக்கதையிலும் செலுத்தாதே என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் திரைக்கதை எல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சத்யராஜின் வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தைப் போலவே இருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் தம்பி வில்லனாக மாறுவது எல்லாம் அந்த காலத்திலேயே வால்டர் வெற்றிவேல் படத்தில் இருந்ததுதான் என பலரும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.