சமீபத்தில், மதகஜராஜா என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழாவுக்கு வருகை தந்திருந்த விஷால் மிகவும் நடுக்கத்துடன் காணப்பட்டார். அந்த நிலையில், அவர் காய்ச்சல் காரணமாக நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவருடைய உடல்நிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சேகுவேரா என்பவர் YouTube சேனலில் பேட்டி அளித்தார். அவரது பேட்டி பிரபல சேனலில் ஒளிபரப்பானது.
அந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக சேகுவாரா மற்றும் அந்த பேட்டியை வெளியிட்ட இரண்டு YouTube சேனல்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.