வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (15:01 IST)
வடிவேலு நடித்த ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’  என்ற திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளன. 
 
நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்த ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’  என்ற திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. சுராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.
 
இந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் பெறவில்லை என்றும் தயாரிப்பாளருக்கு இந்த படத்தால் நஷ்டம் என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’  திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் ஜனவரி 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்