வெற்றி பெற்ற கட்டா குஸ்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

புதன், 28 டிசம்பர் 2022 (14:57 IST)
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி என்ற திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸான இந்த படம் அதன் பின்னர் பார்வைகளைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள விஷ்ணு விஷால் இந்த படத்தின் வியாபாரம் 30 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் இந்ததிரைப்படம் ஓடிடியில் வரும் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகும் என இயக்குனர் செல்லா அய்யாவு தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்