உங்களுக்காக விரைவில் ‘தி லெஜண்ட்’..! – புத்தாண்டில் அண்ணாச்சியின் அப்டேட்!

ஞாயிறு, 1 ஜனவரி 2023 (12:16 IST)
லெஜண்ட் சரவணன் நடித்து வெளியான ‘தி லெஜெண்ட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை புத்தாண்டில் வெளியிட்டுள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்து ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘தி லெஜெண்ட்’. இந்த படத்தில் ராய் லட்சுமி, இந்தி நடிகை ஊர்வசி ரயதுலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு, பல திரையரங்குகளில் வெளியான நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

மேலும் படத்தின் காட்சிகள் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில் படம் ஓடிடியில் வெளியாகாது என லெஜெண்ட் சரவணன் முன்னர் கூறியிருந்தார். பின்னர் ‘தி லெஜெண்ட்’ படத்தை ஓடிடியில் வெளியிட அவர் மனம் மாறியிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டான இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ‘நீங்கள் அனைவரும் காணும் வகையில் ‘தி லெஜண்ட்’ விரைவில்…” என கூறியுள்ளார். ஆனால் ஓடிடி தளம், தேதி ஆகியவற்றை அவர் பகிரவில்லை.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்