நான் நாப்கின் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன் என்று கூறி. நாப்கினுக்கு எதிராக பிரபல நடிகை பிரச்சாரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண்களுக்கு மிகவும் அவசியம் தேவையானது நாப்கின். ஆனால், நடிகை தியா மிர்ஸா நான் நாப்கின்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன் என நாப்கின்களுக்கு எதிராக பிரசாரம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், சமீபத்தில் கடைகளில் விற்கப்படும் நாப்கின்களின் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளவிக்கக் கூடியதாகவும் உள்ளது. நாப்கின் மற்றும் டயப்பர்கள் அதில் அடங்கியுள்ள பிளஸ்டிக்கின் காரணமாக பெருமளவு சுகாதார கேட்டை ஏற்படுத்துவதால், நான் நாப்கின் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன்.
இந்நிலையில் சில நடிகைகள் இதனை விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இது தவறானது. நான் பயோகிரேடபில் நாப்கின்களைதான் பயன்படுத்துகிறேன். இவற்றில், பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாததால் அவை எளிமையாக மண்ணோடு மண்ணாக மக்கக்கூடிய தனமை வாய்ந்தது. அடுத்த தலைமுறையினருக்கு ஒரு நல்ல சுற்றுப்புறத்தை கொடுப்பது நமது கடமை. மேலும் இதனை அனைவரும் அறிந்து செயல்படவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.