பிரபல பாலிவுட் நடிகையும், அமீர்கான் நடித்த 'டங்கல்' படத்தில் அவருடைய மகள் கேரக்டரில் நடித்தவருமான சைரா வாசிம், சமீபத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கண்ணீருடன் ஒரு வீடியோவை பதிவு செய்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
சமீபத்தில் தான் டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றதாகவும், அப்போது தனக்கு பின்னால் அமர்திருந்த நடுத்தர வயது சக பயணி ஒருவர் தனது காலால் தனது பின்புறத்தை சீண்டியதாகவும் அந்த வீடியோவில் கண்ணீருடன் கூறியுள்ளார்.
மேலும் இதை மற்ற சக பயணிகளோ அல்லது விமான ஊழியர்களோ தட்டி கேட்கவில்லை என்றும், இதுதான் நீங்கள் பெண்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பா? என்றும் இது தனக்கு ஏற்பட்ட மிக மோசமான அனுபவம் என்றும் அதில் கூறியுள்ளார்