கவுண்டமணி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், மதுசூதனுக்கு ஆதரவாக ஆர்.கே.நகரில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் நடிகர் கவுண்டமணி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. ஆர்.கே.நகர் தொகுதியில் எந்த கட்சிக்கும் ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யவில்லை. என்னை கேட்காமல் செய்தி வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் எச்சரித்துள்ளார்.