அறிவாளியாக இருந்தால் வெளியே போய்விடுங்கள்… உபேந்திரா படத்தின் ஸ்லைடால் கடுப்பான ரசிகர்கள்!

vinoth
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (14:06 IST)
கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனரும் நடிகருமான உபேந்திரா தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்தான். விஷால் நடித்த சத்யம் படத்தில் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்துடன் கூலி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள யுஐ என்ற படம் பேன் இந்தியா ரிலீஸாக இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக உபேந்திரா பல மாநிலங்களுக்கு சென்று ப்ரமோஷன் செய்தார். தமிழ்நாட்டுக்கும் வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

இந்நிலையில் படம் பார்க்க சென்ற ரசிகர்களை அதிருப்தியும் கோபமும் அடையும் படி ஒரு செயலைப் படக்குழுவினர் செய்துள்ளனர். படம் ஆரம்பிக்கும் முன்னர் போடப்பட்ட ஒரு ஸ்லைடில் “நீங்கள் அறிவாளியாக இருந்தால் இப்போதே தியேட்டரை விட்டு வெளியே சென்றுவிடுங்கள்” எனக் கூறபட்டுள்ளது. இதை பார்த்து சீண்டப்பட்ட ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்