‘இந்தி படத்தையாவது விட்டுவிடலாம் என நினைத்தேன்…ஆனால் ’ உதயநிதி ஸ்டாலின் கருத்து

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (16:21 IST)
நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இந்த ஆண்டு தொடர்ச்சியாக முன்னணி கலைஞர்களின் படங்களை வெளியிட்டு வருகிறார்.

அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக படங்களை வெளியிட்டு வருகிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். இது விமர்சனங்களை எழுப்பினாலும், தொடர்ந்து பட நிறுவனங்களும் ரெட் ஜெயண்ட் மூலமாக படத்தை ரிலீஸ் செய்யவே விரும்புகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் படமான லால் சிங் சத்தா படத்தை வெளியிடுவது குறித்து பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதில் “தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருவதால் ஒரு சிறிய இடைவெளி எடுக்கலாம் என்று இருந்தோம். ஆனால் அமீர்கான் சாரே நேரில் அழைத்து பேசியதால் என்னால் மறுக்கமுடியவில்லை. இந்தி படத்தையாவது விட்டு வைக்கலாம் என இருந்தேன். ஆனால் அது முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்