இது சரிவருமா... கருணாநிதியாகும் உதயநிதி?

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (18:30 IST)
கருணாநிதியின் வாழ்க்கை படத்தில் நடிக்க தன்னிடம் கேட்கப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். 
 
மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 24 ஆம் தேதி வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருடன் அதிதி ராவ் மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளார். 
 
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு நல்ல வசூலையும் பார்த்து வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கருணாநிதியின் வாழ்க்கையை படமாக்குவீர்களா என கேட்கப்பட்டதற்கு பதில் அளித்தார். 
 
அவர் கூறியதாவது, தாத்தா உயிரோடு இருக்கும்போதே நான் இதற்கு ஆசைப்பட்டேன். என்னை வைத்து எடுக்க முயற்சி எடுத்தார்கள். நான் விளையாடுகிறீர்களா? என்று கேட்டேன். இப்போது சிலர் இணைய தொடருக்காக அணுகியுள்ளார்கள். சரியான குழு அமைந்தால் நிச்சயம் நடக்கும் என தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் குவின் எனும் வெப் சீரிஸ் ஜெயலலிதா வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்டது. இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்திருந்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்