இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு தற்காலிகமாக கார்த்தி 29 எனப் பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியாகியுளது. அதில் கடலில் ஒரு ராட்சச கப்பல் வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் இதன் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மாமன்னன் படம் போல நகைச்சுவை பாத்திரமாக இல்லாமல் அழுத்தமான ஒரு கதாபாத்திரமாக இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது இயக்குனர் தமிழ் வடிவேலுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.