ரஜினி எப்படியும் இந்த ஆண்டு அரசியல் கட்சியை ஆரம்பித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே அவர் பாஜக ஆதரவு, திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்து விட்டார். சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசிய அவர் ‘முரசொலி வைத்திருந்தால் திமுக காரர்; துக்ளக் வைத்திருந்தால் அவர் அறிவாளி’ என்று அவர் பேசியது திமுக காரர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினியை விமர்சிப்பது ஏன் எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின் ‘நான் என் டிவீட்களில் ரஜினியைதான் குறிப்பிடுகிறேன் என எதை வைத்து சொல்கிறீர்கள். அவர் இன்னும் அரசியலுக்கே வரவில்லை. அவர் வந்த பின் இந்த கேள்விக்கான பதிலை நான் உங்களுக்கு சொல்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.