உதயநிதி - மகிழ்திருமேனி படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (20:34 IST)
உதயநிதி - மகிழ்திருமேனி படத்தின் டைட்டில் அறிவிப்பு!
உதயநிதி நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று இரவு உதயநிதி நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது
 
இதனை அடுத்து தற்போது இந்த படத்திற்கு ’கழகத் தலைவன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்