“அவரால்தான் என்னை மக்கள் ஏற்றுக்கொண்டனர்…” குலுகுலு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சனி, 23 ஜூலை 2022 (15:11 IST)
குலுகுலு படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 29 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

இதையடுத்து நேற்று படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நிகழ்ச்சி நடந்தது. அப்போது கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் “நான் இங்கு நடிகராகவோ, தயாரிப்பாளராகவோ வரவில்லை. என் நண்பரான பார்த்தாவுக்காகதான் வந்துள்ளேன். அவரால்தான் மக்கள் என்னை நடிகராக ஏற்றுக்கொண்டனர்.” என அன்பு பொங்க பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்