த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (19:12 IST)
‘பரமபதம் விளையாட்டு’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்
த்ரிஷா நடிப்பில் திருஞானம் இயக்கிய ’பரமபதம் விளையாடும்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 28 என கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த வாரம் நடந்த இந்த படத்தின் புரமோஷன் விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது. அடுத்த புரமோஷனில் த்ரிஷா வரவில்லை என்றால் அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது
 
இந்த நிலையில் ’பரமபதம் விளையாட்டு’ திரையிடப்படுவது உறுதி செய்யப்பட்டு முன்பதிவு நேற்று முதல் தொடங்கி விறுவிறுப்பான முன்பதிவுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரிஷா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
ரிலீஸ் படம் ரிலீசாக ஆகாததற்கு காரணம் எதுவும் குறிப்பிடவில்லை இருப்பினும் இந்த படம் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை என்றும் எனவே த்ரிஷா ரசிகர்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்