சார்பட்டா நடிகர் ஜான் கொக்கனின் கதாபாத்திரத்தை வெளியிட்ட துணிவு படக்குழு!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:22 IST)
துணிவு படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திர அறிமுகங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

துணிவு படம் பொங்கலை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ள நிலையில் அவர்களின் கதாபாத்திர அறிமுகங்களை காலை முதல் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சார்பட்டா புகழ் ஜான் கொக்கன் ‘கிரிஷ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக புதிய போஸ்டரோடு அறிவித்துள்ளனர். ஜான் இந்த படத்தில் செகண்ட் ஹீரோவாக நடிப்பதாக அவரே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by John Kokken (@highonkokken)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்