என் இதயத்திற்கு நெருக்கமானது இது – கீர்த்தி சுரேஷ்

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (17:34 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது செல்வராகவனுடன் சானிக் காயிதம் மற்றும் தெலுங்கில் நிதினுடன் ராங் தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு புதிய படம் குறித்து அவர் டுவீட் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர் நிதின். இவர் நடிப்பில் உருவாகி வரும் படம்

ராங் தி. இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தை இயக்குநர் வெங்கி அள்ளுரி இயக்கி வருகிறார்.

 இப்படத்தை போவ் பிரசாத் சார்பில் பித்தரா நிறுவனம் தயாரிகிறது. பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் எப்போது இப்படம் ரிலீஸாகும் எனகீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் ராங் தி படம் வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலிஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவிட்டுள்ளார். அதில், வாஸியை அறிமுகம் செய்கிறேன். இந்த வாஸி படத்தை உங்களின் ஆதரவுக்காவும் அன்பிற்காகவும் இதை முன்வைக்கிறேன்.  இப்படம் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது எனத் தெரிவித்து. இப்படத்தின் போஸ்டரைப் பதிவிட்டுள்ளார்.

வாஸி படத்தை சுரேஷ்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் டோவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.

இப்படத்தை விஷ்ணு ராகன் என்பவர் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் விரையில் வெளியாகவுள்ளது.சினிமா பிரபலங்க, ரசிகர்கள் இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்