இந்திய சினிமாவில் எந்த இயக்குனரும் படைக்காத சாதனை… அட்லியின் சம்பளம் இவ்வளவா?

vinoth

சனி, 12 ஏப்ரல் 2025 (10:29 IST)
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். இவர் தன்னுடைய படங்களுக்கான கதையை பிற படங்களில் இருந்து காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதும் தொடர்ந்து அவரது படங்கள் ஹிட்டாவதால் முன்னணி நடிகர்கள் அவர் படத்தில் நடிக்க விரும்புகின்றனர்.

இந்நிலையில் அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படம் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காக அட்லி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக அவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை எந்தவொரு இயக்குனரும் வாங்காத சம்பளம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு சம்பளமாக 250 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்