வாடிவாசல் ஷூட்டிங்குக்கு தேதி குறித்த படக்குழு… வெளியான தகவல்!

vinoth

சனி, 12 ஏப்ரல் 2025 (10:33 IST)
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படம். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோரின் அடுத்தடுத்த பட வேலைகளால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.

விடுதலை 2 திரைப்படம் ரிலீஸையடுத்து வெற்றிமாறன் தற்போது ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை மூன்று பாகங்களாக உருவாக்கப்பட உள்ளதாகவும் இந்த ஆண்டு மத்தியில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது வெற்றிமாறன் திரைக்கதைப் பணிகளிலும், சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்