சினிமாவில் கதை எழுதுவதற்கு ஆளில்லை - பிரபல இயக்குனர்

Webdunia
திங்கள், 1 மே 2023 (19:19 IST)
சினிமாவில் இப்போது கதை எழுதுவதற்கு ஆளில்லை என்று இயக்குனர் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது  ரூபாய் நோட்டு  உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். இவர், ஒளிப்பதிவாளராகவும் வலம் வந்தார்.

இந்த நிலையில், இவர் தற்போது இயக்கியுள்ள படம் கருமேகங்கள் கலகின்றன. இதில், பாரதிராஜஜா, கவுதம் மேனன், யோகி பாபு, அதிதிபாலன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், தங்கர்பச்சான் அளித்த பேட்டியில், வெற்றி பெற்ற அழகி படத்தின் 2 ஆம் பாகம் என்று கேட்கின்றனர்.என்னால் அதைச் செய்ய முடியாது. கதையின்றி பிரமாண்ட பட்ஜெட் படங்கள் எடுத்துப் பலனில்லை கண்டிப்பாக கதை இருக்க வேண்டும். இப்போது கதை எழுத ஆள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்