‘’பிச்சைக்காரன் -2’’ படத்தின் டிரைலர் ரிலீஸ்

சனி, 29 ஏப்ரல் 2023 (14:21 IST)
‘’பிச்சைக்காரன் -2’’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி  நடித்து இசையமைத்து   வெளியான படம் பிச்சைக்காரன் . இப்படத்தை இயக்குனர் சசி இயகினார். இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் அந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.

இதையடுத்து, பிச்சைக்காரன் -2 படத்தை விஜய் ஆண்டனி, இயக்கி, நடித்து இசையமைத்ததுடன் தயாரித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போது  நடிகர் விஜய் ஆண்டனி, விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று, குணமடைந்தார்.

இந்த நிலையில்,  கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி ‘பிச்சைக்காரன் -2’ படத்தில் இடம்பெற்றுள்ள கோயில்சிலையே என்ற பாடல் ரிலீஸாகி வைரலானது.

இதையடுத்து, இன்று பிச்சைக்காரன் 2 படத்தின் டிரைலர் படக்குழு  வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவின் பெரிய பணக்காரராக விஜய் குருமூர்த்தியை கொலை செய்த நிலையில், அதன் பிறகு சம்பவம், விசாரணை, கொலையாளியை கண்டுபிடிப்பது படத்தில் முக்கிய  டிவீட்ஸ்டாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், விஜய் ஆண்டனி, ஆக்சன் காட்சிகளிலும் அசத்தலாக நடித்துள்ளார். இந்த டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளத

சில ஆண்டுகளுக்கு முன் சசி இயக்கத்தில் வெற்றி பெற்ற பிச்சைக்காரன் 1 படத்தைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள பிச்சைக்காரன் 2 படத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

பிச்சைக்காரன்2 - https://t.co/You39dqc6x
బిచ్చగాడు2 - https://t.co/BbM1dmSxKZ

BLOCKBUSTER

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்