தங்கம், வைரம், நவரத்தின கற்கள் - ஐஸ்வர்யா ரஜினியின் வீட்டில் பல லட்சம் திருட்டு!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (10:45 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே திடீரென இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். தனுஷ் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 
 
ஐஸ்வர்யா புதிய படங்களை இயக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் என பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போயியுள்ளதாம். 
 
இதையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நடந்த முதல்கட்ட விசாரணையில் அவர் வீட்டில் வேலை செய்யும் மூன்று பணியாளர்கள் தான் திருடியிருப்பார்கள் என சந்தேகித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்