காதலிக்க வற்புறுத்தி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (15:52 IST)
சென்னை மேடவாக்கத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி ஒருவர், வண்டலூர் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரை வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம்போல் இன்று கல்லூரிக்குச் செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தபோது, அந்த இளைஞர் , மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று காதலிக்க வற்புறுத்தி அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்