மனுஸ்மிருதி குறித்து போராட்டம் நடந்து வருவது தேவையில்லாதது - கமல்ஹாசன்

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (15:15 IST)
மனுஸ்மிருதி குறித்து போராட்டம் நடந்து வருவது தேவையில்லாதது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக சென்னையில் மாவட்ட நிர்வாகிகளோடு கமல்ஹாசன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன்பின்னர்  செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

 “மக்கள் நீதி மய்யம் கழகங்களுடன் கூட்டணி அமைக்காது என்றும், மூன்றாவது கூட்டணி அமைய காலம் வந்து விட்டதாகவும் கூறி வந்தேன். தற்போது மூன்றாவது கூட்டணி அமைந்துள்ளது.

அனைத்து கட்சியிலும் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் நல்லவர்கள் உள்ளீர்கள். நல்லவர்களுடன் மட்டுமே மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும். நல்லவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் ”ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவரது அறிக்கை வெளியாகும் முன்னரே எனக்கு தெரியும். நான் அவருடன் பேசி கொண்டுதான் இருக்கிறேன். அவருக்கு அரசியலை விட இப்போது உடல்நலம் மிக முக்கியம். சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக அவர் ஆதரவை கேட்போம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், மனுஸ்மிருதி குறித்து போராட்டம் நடந்து வருவது தேவையில்லாதது. மனுஸ்மிருந்தி தற்போது புழக்கத்தில் இல்லாதது. நான் நாத்திகவாதி அல்ல ; ஆனால் பகுத்தறிவாளன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்