அரசியல் கட்டத்தின் அடுத்த மூவ்.... நடிகர் விஜய் நாளை முக்கிய ஆலோசனை!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (17:19 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது அரசியலில் இறங்கவுள்ளார். அதன் முதல்கட்ட வேலையாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை நீலாங்கரை சுமார் 1500 மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கி கௌரவித்தார். அந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்த சில சூசகமான கருத்துக்களை மறைமுகமாக கூறி இருந்தார்.
 
இந்நிலையில் இதறகான அடுத்தடுத்த வேளைகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் சற்றுமுன் கிடைத்துள்ள தகவலின் படி நடிகர் விஜய் நாளை தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்