லெஜண்ட் சரவணனின் அடுத்த பட அறிவிப்பு எப்போது? விறுவிறுப்பாக நடக்கும் கதை கேட்கும் படலம்!

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (16:04 IST)
லெஜண்ட் சரவணன் நடித்த லெஜண்ட் திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார்.. தமிழ் உட்பட 5 இந்திய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இன்று வெளியானது ‘தி லெஜண்ட்’ திரைப்படம்.

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ப்ரமோஷன்களை பிரம்மாண்டமாக செய்து செயற்கையாக ஒரு எதிர்பார்ப்பை படக்குழுவினர் உருவாக்கினர். ஆனால் படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் அந்த படத்துக்கு பிறகு மீண்டும் அடுத்த படத்தில் நடிக்க சரவணன் ஆர்வமாக இருப்பதாகவும் அதற்காக இப்போது கதை கேட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அறிவிப்பை தீபாவளி அன்று வெளியிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்