இதுவரை தி லெஜண்ட் திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்ன?- வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (09:16 IST)
தி லெஜண்ட் திரைப்படம் ஆரவாரமாக உலகம் முழுவதும் 2500 திரைகளில் ரிலீஸ் ஆனது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார்.. தமிழ் உட்பட 5 இந்திய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இன்று வெளியாகியுள்ளது ‘தி லெஜண்ட்’ திரைப்படம்.

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்காக பல கோடி ரூபாயை விளம்பரத்துக்காக படக்குழு செலவிட்டது. தமிழ்நாட்டில் படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்துள்ளார்.

படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனாலும் முதல் நாள் ஓப்பனிங் இந்த படத்துக்கு நல்லவிதமாக கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் நாளில் திரையரங்குகள் மூலமாக 2 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதன் பின் வார இறுதி நாட்களை சேர்த்தால் இதுவரை 6 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் பட்ஜெட்டை பார்க்கும் போது இந்த தொகை திருப்தி அளிக்கும்படி இல்லை என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்