கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கமல்ஹாசன், ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தின் பட்ஜெட் அந்த காலத்திலேயே ரூ.20 கோடி. இது இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்க்கது.
இந்நிலையில் இப்போது 'ஆளவந்தான்' படத்தை டிஜிட்டலாக்கி மீண்டும் திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வந்தாலும், இப்போது விக்ரம் வெற்றியை அடுத்து இந்த வேலைகள் சூடுபிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.