குழந்தைகளை குஷிப்படுத்த வரும் "தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ"!

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (07:22 IST)
தணிக்கை குழுவின் பாராட்டை பெற்ற குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும்  தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம். 
 
தி அட்வென்ச்சர்ஸ் ஆப். ஆர். ஐ என்ற ஆங்கில திரைப்படம்  தமிழில் டப்பாகி வெளியாகவுள்ளது. குருபரன் இன்டர்நேஷனல் இப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுகிறது. இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. 
 
தணிக்கை குழுவின் பாராட்டுடன் "U" சான்றிதழ் பெற்றுள்ளது. லயன்ஸ்கேட் எசிஇ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஸ்டீபன் ஷிமெக் இயக்கத்தில் ஜுட்  மேன்லி சோபியா அலோங்கி, ஜெ. ஆர் பிரௌன் ஆகியோர் நடிப்பில் இப்படம் தயாராகி உள்ளது. 
 
ஏற்கனவே  இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் குழந்தைகளுக்கான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதியன்று திரைக்கு வர விருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்