விக்ரம் இல்லன்னா தங்கலான் படத்துல ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன் -மாளவிகா மோகனன் !

Webdunia
சனி, 20 மே 2023 (14:23 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் ஷூட்டிங் நடந்தது.

இந்த படம் மூன்று மொழிகளில் வெளியாகும் என தெரிகிறது. மேலும் பல மொழிகளில் டப் ஆகி ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர். சமீபத்தில் விக்ரம் படத்துக்கான ஒத்திகையின் போது காயமடைந்தார். அதனால் ஷுட்டிங் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது விக்ரமுக்கு ஏற்பட்ட காயத்தால் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் “படத்தில் விக்ரம் மட்டும் இல்லையென்றால் இவ்வளவு கடினமான பணியினை செய்திருக்கவே முடியாது. சின்ன சின்ன விஷயங்களில் கூட அவர் எனக்கு உதவி செய்தார்.  சுற்றியுள்ள அனைவரையும் அவர் நன்கு கவனித்துக் கொள்வார். நகைச்சுவையில் அவர் வேற லெவலில் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்