கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி… பிரம்மாண்டமாக உருவாகும் படம்!

சனி, 20 மே 2023 (07:41 IST)
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வணக்கம் சென்னை மற்றும் காளி ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இப்போது அவர் பேப்பர் ராக்கெட் என்ற நேரடி ஓடிடி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பெரியளவில் கவனம் பெற்றது.

இந்நிலையில் கிருத்திகா அடுத்து இப்போது ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளாராம். விரைவில் இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்