ஒரே மணி நேரத்தில் உலக அளவில் டிரெண்ட் ஆன 'தல விடுதலை' பாடல்

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2017 (22:59 IST)
தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் 'தல விடுதல' பாடல் இணணயதளத்தில் வெளியானது



 
 
நள்ளிரவு 12 மணிக்குத்தான் இந்த பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இரண்டு மணி நேரத்திற்கு முன்கூட்டியே இந்த பாடல் வெளிவந்துவிட்டது. இதனால் பெரும் உற்சாகம் அடைந்த அஜித் ரசிகர்கள் இந்த பாடலை கேட்ட பின்னர் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் அதற்கென தனியாக #Thalaviduthalai' என்ற டேக் அமைத்து டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
 
முதலில் சென்னை டிரெண்டிங், பின்னர் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன இந்த டேக், ஒரே மணி நேரத்தில் உலக அளவிலான டிரெண்டிங்கில் இடம் பிடித்தது. ஏற்கனவே டுவிட்டர் சமூக இணையதளம் அஜித் ரசிகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அதை நிரூபனம் செய்வது போல் இந்த நிகழ்வு காட்டுவதாக கூறப்படுகிறது.
 
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக்  ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்