ரஜினியின் 'காலா'வில் தனுஷ் நடிப்பது உண்மையா?

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2017 (22:35 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தனுஷ் தயாரித்து வரும் 'காலா' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்துவிட்ட நிலையில் சென்னையில் வெகுவிரைவில் இரண்டாம் கட்ட படபிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் இளவயது ரஜினி கேரக்டரில் தனுஷ் நடிப்பார் என்று கூறப்பட்டது.



 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய தனுஷ், 'இந்த படத்தின் தயாரிப்பாளராக நான் இருந்தாலும் உண்மையில் இளவயது ரஜினி கேரக்டர் இருக்கின்றதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. அப்படி ஒருவேளை இருந்து அந்த வாய்ப்பை இயக்குனர் எனக்கு கொடுத்தால் கண்டிப்பாக எனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறினார்
 
மேலும் 'பவர்பாண்டி 2' படத்தின் ஸ்பார்க் தனக்கு சமீபத்தில் கிடைத்ததாகவும் வெகுவிரைவில் இந்த படம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறிய தனுஷ், ஆனால் அதே நேரத்தில் அதற்கு முன்னர் இன்னொரு படம் இயக்கிவிடலாம் என்ற ஐடியாவும் உள்ளது என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்