சூர்யா நடித்து முடித்துள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படம் லாக்டவுன் முடிந்து திரை அரங்குகள் திறந்த உடன் வெளியாகும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தை அடுத்து அவர் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் ’வாடிவாசல்’ படத்தின் தயாரிப்பாளர் தாணு அவர்கள் சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒரு கவிதையையும் ’வாடிவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டு உள்ளார். இந்தக் கவிதை மற்றும் வாடிவாசல் போஸ்டர் ஆகியவைகளை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதால் வைரல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தயாரிப்பாளர் தாணு அவர்கள் சூர்யாவுக்கு பிறந்த நாள் தெரிவித்த கவிதை இதுதான்: