மெர்சல் தெலுங்கு ரிமேக்: ரிலீஸ் ஒத்திவைப்பு; காட்சிகள் நிக்கம்!!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (22:05 IST)
தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் வெளியாகும் மெர்சல் திரைப்படம் நாளை வெளியாவதாக இருந்தது. ஆனால், தற்போது ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


 
 
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் மெர்சல். இப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்களுக்கு கடும் கண்டனம் எழுந்தது. 
 
இந்நிலையில் தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் மெர்சல் படம் வெளியாக இருந்தது. அங்கும் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்த கூடிய வாய்ப்புகள் இருப்பதால் அதனை நீக்கி கொள்வதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
அதோடு மட்டும் இல்லாமல் மேலும் சில காரணங்களுக்காக ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் ஒத்திவைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்