மெர்சல் விவகாரம் - விஜய் பரபரப்பு அறிக்கை

புதன், 25 அக்டோபர் 2017 (16:18 IST)
மெர்சல் திரைப்படத்தை வெற்றிப்படமாக ஆக்கியதற்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 

 
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகள் கொண்ட வசனம் இடம் பெறுவதாக தமிழிசை சவுந்தரராஜன் போர்க்கொடி தூக்கினார். அவரைத் தொடர்ந்து ஹெச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர். 
 
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் ஹெச்.ராஜாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், மெர்சல் திரைப்படம் வசூல்ரீதியாக மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. இதுவரை ரூ.150 கோடியை படம் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளர். அதில் “ மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில், என் திரையுலக நண்பர்கள், ஊடகங்கள், பத்திரிக்கை, அரசியல் தலைவர்கள், எனது ரசிகர்கள் என அனைவரும் மிகப்பெரும் ஆதரவு தந்தனர்.
 
மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்த அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்