சூப்பர் ஸ்டார் வீட்டில் சினிமா நட்சத்திரங்கள் ஆலோசனை !

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (18:57 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 4 வது கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொது ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்துறைகளும் முடங்கியுள்ளன. இந்நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநில அரசுகள் திரைப்பட தளர்வுகளை அறிவித்துள்ளன.

அதனால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தெலுங்கு திரையுலகினர், சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வீட்டில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நடிகர் நாகார்ஜூனா,  அல்லு அரவிந்த், இயக்குநர் ராஜமௌலி, தெலுங்கான திரைப்படதுறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் சமூக விலகலுடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களுக்கு முன்னுரிமை, பாதியில் நிற்கும் படங்களுக்கு அனுமதி கொடுப்பது, நிலைமை சீராகும் வரை புதிய படங்களுக்கு அனுமதி தராமல் இருப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. கொரோனா ஊரடங்கில் கிட்டத்ட்ட 40 படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளதாகவும், 60 படங்கள் பாதியில் நிற்பதாகவும் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்