7 புதுப்படங்கள்… ஒரு ரி ரிலீஸ்- இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீஸா?

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (08:50 IST)
தமிழ் சினிமாவில் இந்த மாதத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. அதனால் நீண்ட நாட்களாக காத்திருந்த சிறிய படங்களில் ரிலீஸ் அணிவகுப்பு நடந்து வருகிறது. கடந்த வாரம் 3 படங்கள் ரிலீஸான நிலையில் இந்த வாரம் 7 படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’, சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள ‘அழகிய கண்ணே’, பசுபதி, ரோஹினி நடித்துள்ள ‘தண்டட்டி’, சுந்தர் சி நடித்துள்ள தலைநகரம் 2, புதுமுகங்கள் நடித்துள்ள ‘நாயாட்டி’ மலையாள டப்பிங் படமான ரெஜினா மற்றும் தூமம்  என 7 புதுப்படங்கள் ரிலீஸாகின்றன. இவை அனைத்துக்கும் போதுமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவை தவிர கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு திரைப்படம் டிஜிட்டலாக்கப்பட்டு வெளியாகிறது. இந்த படத்துக்கும் மிகப்பெரிய அளவில் 70 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் எந்தப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிப் படமாக அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்