லிங்குசாமி படத்தில் இணைந்த சூர்யா பட வில்லன்!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (15:36 IST)
இயக்குனர் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் சிராக் ஜனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் வாய்ப்புக் கிடைக்காத இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் ஆதி நடிக்க உள்ளார். ஆதிக்கு ஜோடியாக நடிக்க அக்‌ஷரா கவுடா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவரின் கதாபாத்திரம் திரைக்கதையில் முக்கியமான ஒரு பாத்திரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தில் புது வில்லனாக சிராக் ஜனி இணைந்துள்ளார். இவர் சூர்யா நடித்த காப்பான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்