கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

vinoth

திங்கள், 30 டிசம்பர் 2024 (09:34 IST)
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. ஆனால் போஸ்டர் வெளியானதோடு சரி, படத்தின் ஷூட்டிங் ஒருநாள் கூட நடக்கவில்லை என சொல்லப்பட்டது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி படத்தில் இருந்து வாசனை நீக்கிவிட்டோம் என அறிவித்துள்ளார். படத்துக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்பதால்தான் அவரை நீக்கியதாக செல்அம் தெரிவித்தார். இதையடுத்து தன்னிடம் சொல்லாமல் எப்படி பத்திரிக்கையாளர்களிடம் அறிவிக்கலாம் எனக் கோபப்பட்டு பேசியிருந்தார் வாசன்.

இதையடுத்து சில மாதங்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த டிடிஎஃப் வாசன் தற்போது கையில் பாம்பு ஒன்றை சுற்றிக் கொண்டு காரில் சென்ற வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இதையடுத்து காவல்துறை இது சம்மந்தமாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்