மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

vinoth

திங்கள், 30 டிசம்பர் 2024 (11:27 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படத்தில் இருந்து அவர் விலகிக் கொள்ள பின்னர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதியே வணங்கான் படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பாலா “வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகவில்லை. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்துதான் அந்த முடிவை எடுத்தோம். அவரை வைத்து நிஜ லொகேஷன்களில் ஷூட் செய்யமுடியவில்லை. படத்தின் கதைக்களமும் சுற்றுலாத் தளங்களில் நடப்பது. அவரைப் பார்க்க அவ்வளவு கூட்டம் வருகிறது. நாங்கள் இருவரும் பேசி வேறு படம் பண்ணிக்கொள்ளலாம் என முடிவெடுத்தோம்” எனக் கூறியுள்ளார்.

மேலும் மீண்டும் சூர்யாவுடன் வேறொரு படத்தில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு “இப்போதைக்கு சொல்ல முடியாது. அப்படியே நடந்தால் கூட நிஜ லொகேஷன்களில் ஷூட்டிங் நடத்தத் தேவையில்லாத கதையாகப் பார்த்து உருவாக்க வேண்டும். நடக்கலாம்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்