ஜி வி பிரகாஷ் 100 ஆவது படம்.. எதிர்பார்ப்பை எகிறவைத்த பதிவு!

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (09:12 IST)
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர்.

இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இதை முடித்துவிட்டு மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

சூர்யா கங்குவா படத்தை முடித்ததும் இந்த படம் தொடங்கும் என சொல்லப்படும் நிலையில் இந்த படம் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் 100 ஆவது படமாக அமையும் என சொல்லப்படும் நிலையில் சமீபத்தில் ஜி வி பிரகாஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “விரைவில் GV100..” என டிவீட் செய்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்