வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் மிர்ச்சி சிவா நடித்த சுமோ என்ற திரைப்படம், 2019 ஆம் ஆண்டே ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாரானது. ஹோசிமின் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில், பிரவீன் படத்தொகுப்பில் உருவான இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோசினோரி தசீரோ, விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ஜப்பானைச் சேர்ந்த சுமோ சண்டை கலைஞர் ஒருவர் நடித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக சுமோ உருவாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ், சுமோ என்ற படத்தை பிரமாண்டமாக தயாரித்தது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.