சட்டம் பயிலும் மாணவ - மாணவியருக்கு வழிகாட்டும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.சத்யதேவ் அவர்களின் பெயரில் Satyadev Law Academy- ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ள நிலையில், இதற்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சட்டம் பயிலும் மாணவ - மாணவியருக்கு வழிகாட்டும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.சத்யதேவ் அவர்களின் பெயரில் Satyadev Law Academy- ஐ மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்து, அதன் இலட்சினையை வெளியிட்டார்கள்.
இந்த நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நண்பர் அன்பில் மகேஷ், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள், நடிகர் நண்பர் திரு. சூர்யா, , இயக்குநர் திரு. ஞானவேல் ஆகியோருடன் பங்கேற்றோம்.