விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா.. நெட்டிசன்களின் ரியாக்சன்..!

Siva
வெள்ளி, 5 ஜனவரி 2024 (11:23 IST)
கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஒரு வாரத்துக்கு மேலாகி விட்ட நிலையை நடிகர் சூர்யா இன்று அவருடைய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் விஜயகாந்தை நினைத்து தேம்பி தேம்பி அழுத வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் சூர்யா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

அண்ணனைப் போல யாரும் இல்லை. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். அவரைப் போல யாரும் இல்லை. எப்போதும் அவரின் நினைவு இருக்கும்

நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு, எனக்கு சம்மதமே. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. அண்ணனின் பிரிவு ரொம்ப துயரமானது. பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. முதல்நாளிலேயே என்னை அழைத்து அவருடன் சாப்பிட வைத்தார். அவரின் தட்டில் இருந்து சாப்பாட்டை எடுத்து எனக்கு ஊட்டி விட்டார்

 ஒரு வாரம் கழித்து, அதுவும் இந்தியா வந்து மூன்று நாள் கழித்து, விஜயகாந்த் நினைவிடம் வந்து சூர்யா அஞ்சலி செலுத்துவதை நெட்டிசன்கள் பல நடிப்பு என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்