கேப்டன் மில்லர் மேடையில் பாட்டு பாடி விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய தனுஷ்!

vinoth

வெள்ளி, 5 ஜனவரி 2024 (08:01 IST)
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று முன் தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.  அப்போது மேடையில் தனுஷ் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு அவர் படத்தின் பாடலான “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” பாடலை பாடி அஞ்சலி செலுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்