அவரது மறைவு, தமிழக அரசியலுக்கும், சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பு என்று அரசியல் தலைவர்களும், சினிமாத்துறையினரும் இரங்கல் கூறினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகுமார் கூறியதாவது:
''கேப்டன் விஜயகாந்த் இழப்பு என்பது பேரிழப்பு. கேப்டன் விஜயகாந்த் அனைவருக்கும் ஒரேமாதிரி உணவு அளித்தாரோ அதேபோல் நான் நான் கம்பெனி ஆரம்பித்தபோதும் சொன்னேன். இதையெல்லாம் விஜயகாந்திடம் கற்றுக் கொண்டேன். கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால் முதலமைச்சராக இருந்திருக்கலாம். நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தவர் விஜயகாந்த். நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும். அவரது பெயரை வைப்பதில் தவறில்லை'' என்று தெரிவித்துள்ளார்.